நாட்டில் தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணி தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களிடம் தகவல்களை கேட்டறிந்த பின்னர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
நிதி தொடர்பில் பிரச்சினைகளுக்கு இடமளிக்காது அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய அனைத்து நிவாரணங்கள் தொடர்பில் கண்டறிந்து அவற்றுக்கான வசதிகளை வழங்குவதற்கு துரிதமாக செயற்படுமாறு சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஜனாதிபதி மேலும் ஆலோசனை வழங்கியுள்ளார்.