பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவுமாறு கட்சித் தொண்டர்களுக்கு அமைச்சர் றிசாத் அதிரடிப்பணிப்பு

கொழும்பு வெல்லம்பிட்டி, வென்னவத்தை, கொத்தட்டுவ, பிரெண்டியாவத்தை, ஐடிஎச், கொலன்னாவ ஆகிய பிரதேசங்கலில் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை அமைச்சர் றிசாத் பதியுதீனின் பணிப்பின் பேரில் அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ள அமைச்சர் இந்த மக்களுக்கு மேற்கொள்ள வேண்டிய அவசர உதவிகளையும், நிவாரணப் பணிகளையும் துரித கதியில் வழங்குமாறு விடுத்த வேண்டுகோளை அடுத்து, நிவாரணப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களுக்கும் சென்று, மக்களுக்கு உதவி வருவதாக அமைச்சர் றிசாதின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை (18) அமைச்சரின் வேண்டுகொளுக்கிணங்க 24 படகுகள் மக்களை மீட்டெடுப்பதற்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அமைச்சரின் தனிப்பட்ட நிதியுதவியில் நான்கு படகுகள், வெள்ளத்தினால் வீடுகளில் சிக்குண்டு கிடக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த செய்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை நாட்டின் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட அரநாயக்க, புத்தளம், மன்னார் போன்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை கவனிக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது கட்சித் தொண்டர்களைப் பணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.