பாதிக்கப்பட்ட மாணவர்கள் 1988 அவசர இலக்கத்தினூடாக தகவல் வழங்கவும்…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கையை மீளவும் வழமைக்கு கொண்டு வருவதற்கு விரைவாக உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் சீருடைகள், பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்திருப்பின் அது தொடர்பில் கல்வியமைச்சின் 1988 என்ற அவசர தொடர்பிலக்கத்துக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழங்கப்படும் தகவலுக்கு அமைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும், ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள, சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட, மாணவர்களின் சீருடைகள், பாடப் புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் சேதமடைந்திருப்பின் அவற்றை விநியோகிப்பதற்கு விஷேட அவதானம் செலுத்துமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.