பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்த இரண்டு சிறுவர்கள் பலி…

நேற்றிரவு(15) மன்னார் மடு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காக்கேயன் குளம் பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இரு சிறுவர்களும் கால்நடை ஒன்றை துரத்திச் சென்றபோது, கிணற்றில் தவறி விழுந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

5 மற்றும் 7 வயதுடைய சிறுவர்களே சம்பவத்தில் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.