பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர் கொடுப்பனவு தீர்மானம்..

பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் காவல் கடமைகளில் ஈடுபடுவோருக்கு மாதாந்தம் 22 ஆயிரத்து 500 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று(23) பாராளுமன்ற அமர்வில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உரையாற்றிய போது இதனைத் தெரிவித்தார்.

பாதுகாப்பற்ற புகையிரத  கடவைகளில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் சட்ட சிக்கல்கள் உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை 876 புகையிரத கடவைகளுக்கு முன் எச்சரிக்கையாக அறிவிக்கப்படும் மணியோசை மற்றும் சமிக்ஞை தொகுதிகள் பொருத்தப்படவுள்ளன. ஐந்து கட்டங்களாக இந்தப் பணி நிறைவேற்றப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்..