பாதுகாப்பு செயலாளர் பதவியில் மாற்றத்தினை மேற்கொள்ளவுள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பாதுகாப்பு செயலாளராக பொறியியலாளர்.கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் பதவி வகித்து வருகின்றார்.
இந்நிலையில் அவருக்கு ஜேர்மன் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் பதவியினை வழங்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பாதுகாப்பு செயலாளர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.