பாபுல், பீடா, மாவா, ஹான்ஸ், புகையிலை தூள், இலத்திரனியல் சிகரெட் , பேன் மசாலா, குட்கா பாக்கு வகை போன்றவைகளை விற்பதற்கும் இறக்குமதி செய்வதற்குமான தடைக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியது.
மேலும் மேற்குறித்தவற்றை விற்பனை செய்தால் 2000 ரூபா தண்டபணம் அல்லது ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் புகையிலை மற்றும் மதுசார மீதான தேசிய அதிகார சபையின் ஒழுங்கு விதி சட்டமூலம் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.