பாம் எண்ணெய்க்கான வரி 20 ரூபாவினால் அதிகரிப்பு…

இறக்குமதிச் செய்யப்படும் பாம் எண்ணெய் ஒரு கிலோ கிராமுக்கு அறவிடப்படும் விசேட வியாபார பண்ட வரி, 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 25 ஆம் திகதி முதல் அமுல்படுத்தும் வகையில், நிதியமைச்சினால் இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

விசேட வியாபார பண்ட வரி அதிகரிப்பினால், இதுவரையில் கிலோ கிராம் ஒன்றுக்கு 155 ரூபாவாக இருந்த வரி, 175 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளது.