பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கு ஒத்திவைப்பு

பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றால் எதிர்வரும் ஓகஸ்ட் 6ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பிரதிவாதி ஜானக்க பிரியந்த கலபொடவை கண்டுபிடிக்க முடியாதுள்ளதால் வழக்கு விசாரணையை முன்னெடுத்துச் செல்ல போதுமான சாட்சியங்களால் முடியாது என அரச சட்டத்தரணி கூறியுள்ளார்.

இந்நிலையில் வழக்கு தொடர்பில் சாட்சியங்களை விசாரணை செய்யவென நீதிபதி மேனகா தென்னகோன் வழக்கை ஓகஸ்ட் 6ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

பாரத லக்ஷமன் கொலை சந்தேக நபர்கள் 13 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.