பாரத லக்ஷ்மனின் கொலை நடைபெற்ற பகுதியில் நீதிபதிகள் நேரில் ஆய்வு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலை தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் மூன்று பேரைக் கொண்ட ரயல் அட்பார் உறுப்பினர்கள் மூவரும் நேற்று கொலை இடம்பெற்ற கொலன்னாவ பகுதியில் அவதானிப்புக்களை மேற்கொண்டனர்.

இதன்படி, தமிழ்நாடு வத்த, அங்கொட ஸ்ரீ ராஹல கல்லூரி, ராஜசிங்க வித்தியாலயம் மற்றும் கந்தே விஹாரை ஆகிய இடங்களிலேயே இந்த நேரடி அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேல்நீதிமன்ற நீதிபதிகளான சிராணி ரணசிங்க, பத்மினி ரணவக்க மற்றும் மொராயஸ் ஆகியோரே இந்த அவதானிப்புக்களை நடத்தினர்.

குறித்த கொலை வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட்ட 13 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பாரத லக்ஷ்மன் 2011ம் ஆண்டு ஒக்டோபர் 8ம் திகதியன்று கொலை செய்யப்பட்டார்.