பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு – விடுதலை கோரி துமிந்தவும் மேன்முறையீடு.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மனனை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும் மேன்முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் குறித்த கொலையின் சந்தேகநபர்களில் மூவர் தங்களை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தனர்..

குறித்த கொலை வழக்கு தொடர்பில் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களின் மேன்முறையீடு கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.