பாரத லக்ஷ்மன் கொலை விவகாரம் – மு.பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் மீள் விசாரணை?

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நான்கு பேரை அங்கொடையில் வைத்து சுட்டுக்கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட பிரதிவாதிகள் 13 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று மீள் ஆரம்பமாகியுள்ளது.

இதனை விசேட வழக்காக கருதி மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய வழக்கை விசாரணை செய்வதற்காக மேல் நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரத்ன (தலைவர்) பத்மினி ரணவன குணதிலக்க மற்றும் எம். சீ. பீ. எஸ். மொராயஸ் ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2011ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ம் திகதி முல்லேரியா பிரதேசத்தில் வைத்து பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேரை சுட்டுக் கொலை செய்ததாக, துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

சந்தேக நபர்கள் அனைவரும் நீதிமன்ற பிணையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(riz)