பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் எதிர்வரும் 08ம் திகதி…

எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி பிற்பகல் 2.15க்கு பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் ஆரம்பமாகும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலக அதிகாரிகள் இது தொடர்பில் பாராளுமன்ற அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், இது தொடர்பிலான புதிய வர்த்தமானி ஜனாதிபதியினால் இன்று(23) வெளியிடப்படும் எனவும் பாராளுமன்ற பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கடந்த 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் ஆரம்பமாகும் தினம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்த போதிலும், அதில் திகதி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

$Rishma