பாராளுமன்றத்திற்கு அருகில் தாழிறக்கம்…

பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள நடைபாதையின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக டென்சில் கொப்பேகடுவ மாவத்தையின் மூன்று பாலம் சந்தியில் இருந்து பாராளுமன்றத்திற்கான ஒழுங்கை மூடப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மாற்று வீதியினை பயன்படுத்துமாறு பொலிசார் கோரியுள்ளனர்.