ஒன்றிணைந்த கூட்டு எதிர்க் கட்சியில் அங்கம் வகிக்கும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சற்று முன்னர் நாடாளுமன்ற சுற்று வட்டாரத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
வரவு செலவுத் திட்டம் தொடர்பான நாடாளுமன்ற குழுநிலை விவாதம் இன்று(03) இடம்பெற்று வரும் நிலையில் இந்த போராட்டம் நடைபெறுகின்றது.
பாராளுமன்ற சுற்றுவட்டப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.





