(FASTGOSSIP| COLOMBO) – நியூஸிலாந்து பாராளுமன்றத்தில் மோசமான பாலியல் ரீதியான தாக்குதல்கள், அத்துமீறல்கள் மற்றும் கேலிப்பேச்சுகள் இடம்பெற்று வந்துள்ளதாக புதிய சுயாதீன விசாரணையொன்று தெரிவிக்கிறது.
இது தொடர்பில் அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் திரேவர் மெயிலார்ட் நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவிக்கையில், இது சகிப்புத்தன்மை காண்பிக்க முடியாத தீவிர நிலைமையாகும் எனக் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற எல்லைக்குள் பணியாற்றும் 14 பேர் தாம் அங்கு பாலியல் ரீதியான தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக அந்த 120 பக்க விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.
அத்துடன் ஒரே மனிதரால் 3 மோசமான பாலியல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கப்படுகின்றது.