(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் பாராளுமன்றத்தை இடைநிறுத்தம் செய்வதற்கு எடுத்த தீர்மானம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்படிக்கையின்றி விலகுவதற்கு எதிர்ப்பைக் கொண்டவர்கள் கடும் கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் பிரதமரின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பிரதமரின் பாராளுமன்றத்தை இடைநிறுத்துவதற்கான திட்டத்திற்கு எதிராக சட்டரீதியான சவால் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கையொப்பமிட்டு முறைப்பாடொன்றை தாக்கல் செய்துள்ளனர்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திலிருந்து ஒக்டோபர் மாதம் வரையான 5 வாரங்களுக்கு பாராளுமன்றத்தை இடைநிறுத்தம் செய்வது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது சம்பந்தமான பிறிக்ஸிட் செயற்கிரமம் தொடர்பில் விவாதத்தை நடத்துவதற்கான நேரத்தை அனுமதிப்பதாக உள்ளதாக அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.