தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு வருகை

(FASTNEWS|COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் முன்னியாகியுள்ளார்.

 

—————————————————-(update)

பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு சமூகமளிப்பதாக தயாசிறி தெரிவிப்பு

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் அழைப்பின்படி சாட்சியமளிக்க இன்றைய தினம்(10) முன்னிலையாகவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று(10) பாராளுமன்றத் தெரிவுக் குழு பிற்பகல் 2.00 மணிக்கு கூடவுள்ளது.

ஏற்கனவே தெரிவுக் குழுவுக்கு அழைக்கப்பட்டபோதும் தயாசிறி ஜயசேகர எம்.பி. அதில் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.