எதிர்வரும் பொதுத் தேர்தலினை வெற்றி கரமாய் நடாத்த காய் நகர்த்தும் ஐ.தே.கட்சி தேர்தல் அறிக்கையினை தயாரிக்க 8 பேர் அடங்கலான குழுவொன்றினை நியமித்துள்ளது.
அமைச்சர்களான கபீர் ஹாஷிம், ரஞ்சித் மதும பண்டார, கயந்த கருணாதிலக, ஹரிசன், அகில விராஜ் காரியவசம், தலதா அத்துகோரள,ரோஸி சேனாநாயக்க மற்றும் பிரதம அலுவலக பிரதானி சாகல ரத்னாயகே ஆகியோரே இக்குழுவில் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலறி மாளிகையில் நடைபெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்குழுவின் முதல் சந்திப்பினை விரைவில் நடாத்த உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.