பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணை 2ஆவது நாளாக இன்று(13) முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த மனுக்கள் தொடர்பில் சட்டமா அதிபர் தமது நிலைப்பாட்டை இன்று விளக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
13 மனுக்களில் 12 மனுக்கள் மீதான விசாரணைகள் நேற்று(12) முன்னெடுக்கப்பட்டதுடன், இன்று மீதமுள்ள மனு மீதான விசாரணை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.