பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியை இரத்து செய்து, பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று(04) விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளன.
இன்று(04) முதல் தொடர்ச்சியாக எதிர்வரும் மூன்று நாட்களுக்கு குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளன.
ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
முன்னதாக இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.