பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த மனுக்கள் மீதான விசாரணை இன்றும்…

ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைத்து வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தின் 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இரண்டாவது நாளாக இன்று(05) இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.