பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று(06) மூன்றாவது நாளாகவும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
பிரதம நீதியசரசர் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட 13 தரப்புக்களினால் குறித்த மனுக்கள் தாக்கள் செய்யப்பட்டுள்ளன.