பாராளுமன்றம் நாளை (25) கலைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம் மற்றும் பி.ஹெரிசன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
ஊடக சந்திப்பு ஆரம்பமாவதற்கு முன்னர் அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம் மற்றும் பி.ஹெரிசன் ஆகியோர் இடையே பேச்சுக்கள் முணுமுனுக்கப்பட்டன.
பி.ஹெரிசன் அகிலவிடம் முகம் தெளிவாக இல்லையே. ஏதும் பிரச்சினையா?? நாளையா நாளை மறுதினமா கலைக்கப்படுகின்றது என வினவ;
அகில விராஜ் மௌனமாய் தலையசைக்கின்றார்.
ஹெரிசனொ, ஆச்சரியத்துடன் உண்மையா என வாய் பிளக்குகிறார்.
மேற்கண்டவாறு இருவரது முணுமுணுப்புக்களும் அமைய, இதேவேளை, இன்று வெளியாகியுள்ள தேசிய நாளேடுகளிலும் பாராளுமன்றம் இன்று இரவு அல்லது நாளை கலைக்கப்படலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
ஆளும் தரப்பு அமைச்சர்கள் சிலர் இதே கருத்தை கூறும் நிலையில் சிலர் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்கின்றனர். மொத்தத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படுமா? இல்லையா? என்பது குழப்பமான கதையாக மாறியுள்ளது.
சிலரது தகவல்படி பாராளுமன்றம் ஜூலை மாதம் முதல் வாரத்தில் கலைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.