பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அதிக பெரும்பான்மையுடன் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது.
கண்களால் பார்த்து பெரும்பான்மை அறிந்த சபாநாயகர், நவம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு, நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைத்தார்.
++++++++++++++++++++++++++++++++++ UPDATE
பாராளுமன்றில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..

பாராளுமன்றில் தற்போது அமைதியின்மை நிலவி வருகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித தெவரப்பெரும மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோரை கெய்து செய்யுமாறு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்து கூச்சலிட்ட வண்ணம் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
சபாநாயகர் ஆசனத்தை பாராளுமன்ற உறுப்பினர் அரந்திக பெர்ணான்டோ ஆக்கிரமித்துள்ளார். சபாநாயகர் ஆசனத்திலிருந்து அவர் எழுந்து செல்லாது தொடர்ந்து அமர்ந்திருக்கும் காட்சிகளை தற்போது காணக்கூடியதாக உள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.