நேற்று(23) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட திருத்தங்களுடனான செயலூக்கமிக்க கடன் முகாமைத்துவ சட்டமூலம் வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.
அது, வாக்கெடுப்பின் போது, சபைக்கு சமூகமளிக்காக அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக வாக்களித்துள்ளதாக குறித்த வாக்களிப்பு பட்டியலில் குரிப்பிடப்பட்டுள்ளதேயாகும்.
அதன்பிற்பாடு, பாராளுமன்றில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சபை சில வினாடிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டதோடு, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் சபையினை விட்டும் வெளியேறியிருந்ததாகவும், தெரிவிக்கப்படுகின்றது.