பாராளுமன்றில் மீள்நிர்ணய அறிக்கை குறித்த விவாதம் இன்று(24)

மாகாண சபைத் தேர்தல் எல்லை மீள்நிர்ணய அறிக்கை குறித்த விவாதம் இன்று(24) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்திருந்தார்.

மேலும், குறித்த விவாதத்தின் பிற்பாடு, வாக்கெடுப்பின் போது இந்த அறிக்கை தோல்வி காணும் பட்சத்தில், சபாநாயகரால் பிரதமர் தலைமையிலான குழு ஒன்று நியமிக்கப்பட்டு, மாகாண சபைத் தேர்தலுக்கான அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் குறித்த அறிக்கையில் காணப்படுகின்ற குறைப்பாடுகளை முன்னிறுத்தி, பல கட்சிகள் அதற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.