எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் பொதுமக்களுக்கான பார்வைக்கூடமும், சபாநாயகரின் விசேட விருந்தினர்களுக்கான பார்வைகூடமும் மூடப்படவுள்ளதாக பாராளுமன்றத்தின் படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.
குறித்த தினத்தில் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் சபைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதும், பொதுமக்களுக்கான பார்வைக்கூடமும், சபாநாயகரின் விசேட விருந்தினர்களுக்கான பார்வைகூடமும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.