பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைக்க யோசனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கும் யோசனையொன்று இன்று(08) முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல ஊடாக இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.

அதற்கமைய 23ஆம் திகதி முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 7.30 மணிவரை சபை நடவடிக்கைகயை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதத்தின் முதலாவது சபை அமர்வு இன்று(08) ஆரம்பிக்கவுள்ளதுடன், 2019.09.20 ஆம் திகதி 99ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 18 ஆம் இலக்க விடயமாகக் காணப்படும், பொது ஒப்பந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.