பாராளுமன்ற அருகில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு..

பாராளுமன்றிற்கு உள்நுழையும் வீதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு இடப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

கலகம் அடக்கும் பொலிசார், சாலை தடைகள் மற்றும் நீர்ப்பாய்ச்சி வாகனம் ஆகியவை களத்தில் ஆயத்த நிலையில் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து காவல்துறை அறிவிக்கையில், இன்று(20) அங்கவீன இராணுவ வீரர்கள் பாராளுமன்ற அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கை எனவும் மேலும் தெரிவித்திருந்தனர்.

 

(rizmira)