அரசின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை கூடிய விலைக்கு விற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அநுரகுமார திஸாநாயக்க இது தொடர்பான தெரிவித்துள்ளார்.
“..இந்த வாகனங்களுக்குத் தீர்வை அறவிடப்பட்டிருந்தால் திறைசேரிக்கு சுமார் மூன்று கோடியே 30 இலட்ச ரூபா கிடைத்திருக்கும் எனவும், மக்கள் சேவைக்கென தீர்வையற்ற
ரீதியில் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களை கூடிய விலைக்கு விற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் தேடிக் கொண்டிருக்கின்றனர்”
“நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தம்மோடு வைத்துக் கொள்ள அரசு இலஞ்சமாக அவர்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்கியிருப்பது நாடறிந்த உண்மை. இதேவேளை, அவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்கள் இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பது அரசுக்கு நன்றாகத் தெரிந்திருந்த போதிலும் அவர்களது அதிருப்தியை சம்பாதித்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் கண்களை மூடிக்கொண்டு இருக்கின்றனர்..” எனவும் அநுரகுமார திஸாநாயக்க மேலும் குற்றஞ் சாட்டியுள்ளார்.