பாராளுமன்ற உறுப்பினர் சமலிடம் FCID வாக்குமூலம்..

டீ.ஏ.ராஜபக்ஷ அறக்கட்டளை செயற்பாடுகள் குறித்து டீ.ஏ.ராஜபக்ஷ அறக்கட்டளை நிலையத்தின் தலைவராக கடமையாற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ’விடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்துள்ளது.

நேற்று(23) மாலை வீரகெட்டி’யில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு சென்ற நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் சுமார் ஒரு மணி நேரம் தன்னிடம் வாக்குமூலம் பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

 

(rizmira)