ஒன்றிணைந்த எதிர்கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் அவரது சகோதரரான ஆரச்சிகட்டு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த ஆகியோரை எதிர்வரும் ஜூன் 07ம் திகதி வரையில் விளக்கமறியல் வைக்க சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று(24) உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2007 நவம்பர் 24 ஆம் திகதி, அப்போதைய ஆரச்சிக்கட்டுவ பிரதேச செயலாளராக இருந்த, தனசேன சுரசிங்கவை தாக்கியமை, கடமைக்கு இடையூறு விளைவித்தமை, மிக கொடூரமாக வற்புறுத்தியமை உள்ளிட்ட விடயங்களை மேற்கொண்டமை தொடர்பில் இவர்கள் இருவருக்கும் எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் கைதான இருவருக்கும் கடந்த வருடம் 2016 ஆண்டு பிணை வழங்கப்பட்டதோடு, 2017 முதல் இவர்கள் பிணை விதி முறைகளை மீறியதை அடுத்து அவர்களை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டு, கைதாகியமையும் குறிப்பிடத்தக்கது.