பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி…

2004 – 2006ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அவர் அமைச்சராக இருந்த போது சட்டவிரோதமாக 40.1 மில்லியன் ரூபா கையகப்படுத்தியமை குறித்த குற்றச்சாட்டில் இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல இன்று(03) கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமது வழங்கியுள்ளது.

இன்று குறித்த வழக்கு விசாரணையின் போது ரோஹித அபேகுணவர்த்தனவின் வழக்கறிஞர் தனது பிரதிவாதிக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக ஜப்பான் செல்ல வேண்டியுள்ளதாகவும் செப்டெம்பர் 05ம் திகதி வரைக்கும் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடையினை தளர்த்துமாறும் கோரப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரது கடவுச்சீட்டினையும் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

R.Rishma