பாராளுமன்ற காணிக்கான உறுதிப்பத்திரம் கையளிப்பு…

பாராளுமன்றம் அமைந்துள்ள காணிக்கான எல்லைகள் குறிப்பிடப்பட்ட நிரந்தர உறுதி நேற்று(20) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1982 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிக்குரிய உரிமைப் பத்திரத்தின் மூலம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கான இந்தக் காணி பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.