பாராளுமன்ற சபை குழப்பம் – குழு மீண்டும் இன்று(27) கூடுகிறது…

அண்மையில், பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பகரமான நிலைமைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழு,இன்று(27) மீண்டும் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான மேற்படி குழுவை, சபாநாயகர் கருஜயசூரிய நியமித்திருந்தார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளிடமே, குறித்த குழு இன்று விசாரணைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட காணொளிகள் தொடர்பில் ஆராய்வதற்காக, பாராளுமன்ற பணியாட்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.