பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று மீண்டும் கூடுகிறது

(FASTNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று மீண்டும் கூடுகிறது.

இன்றையதினம் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமியிடம் காலை 9 மணிக்கு சாட்சிபதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

சட்ட மா அதிபர் டப்புலா டி லிவேராவும் இன்று தெரிவுக் குழு முன் சாட்சியமளிக்கவுள்ளதுடன், மத்திய வங்கியின் மேலும் இரண்டு சிரேஷ்ட அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவுக் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.