பாராளுமன்றத்தில் விவாதத்திற்காக நேர ஒதுக்கீடு தொடர்பில் ஏற்பட்ட அமைதியின்மையால் பாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்று(6) மாலை 3 மணி வரையிலும் கொண்டு நடத்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், சபை நடவடிக்கைகள் சற்று முன்னர் ஒத்திவைப்பக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.