பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் சட்டம், மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்படி, புதிய நிலையியற்கட்டளைகள் சட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் ஜே.வி.பி. யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்க குறித்த அமைச்சரோ பிரதி அமைச்சரோ சபையில் காணப்படவில்லை.
இது தொடர்பான சிக்கல் நிலை எழுந்தபோதே சபாநாயகர் இந்த அறிவிப்பைச் செய்துள்ளார்.
இந்த நிலையியற் கட்டளைகள் சட்டம் தொடர்பில் அடுத்த வார கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்படும் எனவும் சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்