பாராளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த கூட்டத் தொடர் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
இந்த உரை தொடர்பாக எதிர்வரும் 10 ஆம் திகதி நாடாளுமன்ற விவாதம் ஒன்றும் நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, இந்த நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட சிறப்பு அதிதிகள் சபாநாயகரின் வரவேற்பின் பேரில் பங்குகொள்ளவுள்ளனர்.
அத்துடன் அமைச்சரவையில் இருந்து வெளியேறிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களது சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சியில் ஆசனங்களை ஒதுக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் இத்தாவல குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த இந்தக் கூட்டத்தொடரை பார்வையிட பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது.