பாராளுமன்ற மின்தூக்கியில் பயணிக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை மட்டு…

பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் பயணித்த பாராளுமன்ற மின்தூக்கி இடைநடுவில் செயலிழந்தமையை தொடர்ந்து அதில் பயணிக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை 06 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மின்தூக்கி நேற்று(07) திடீரென செயலிழந்ததன் காரணமாக அதில் பயணித்த 12 பாராளுமன்ற உறுப்பினர்களும் சுமார் 15 நிமிடமளவில் மின்தூக்கியில் சிக்கிக்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.