அண்மையில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து ஆராய சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட குழு இன்று(12) முதற்தடவையாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக் குழுவில், சமல் ராஜபக்ஷ, ரஞ்சித் மத்தும பண்டார, சந்திரசிறி கஜதீர, பிமல் ரத்னாயக மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.
பாராளுமன்றத்தில் நவம்பர் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களால், பாராளுமன்றத்தின் சொத்துக்கள் பல சேதமடைந்ததுடன் சுமார் 260,000 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.