பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில், தமது குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அறிக்கை தொடர்பில் சபாநாயகர் பரிசீலனை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பங்களின் போது அரச ஊழியர்களை தாக்கிய மற்றும் அரச சொத்துக்களை சேதமாக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் எழுவர் கொண்ட பாராளுமன்ற விசாரணைக் குழுவொன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் நியமிக்கப்பட்டிருந்தது.