பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் அழைப்பினை மறுத்தது மைத்திரி

(FASTGOSSIP | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையாக மாட்டார் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழு முன்னிலையில் முன்னிலையாக ஜனாதிபதிக்கு மூன்று தினங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் குறித்த அழைப்பு இதுவரையில் ஜனாதிபதிக்கு கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.