பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவானது அரசியல் நாடகமாகும் – ஜனாதிபதி

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவானது அரசியல் நாடகம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊடக பிரதானிகளை சந்தித்த போது இன்று(26) தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி;

“தெரிவுக்குழுவானது அரசியல் நாடகமாகும். குறித்த நாடகத்தின் பயிற்சிகள் அலரி மாளிகையில் மாலை வேளையில் இடம்பெறுகிறது. நாடகம் காலை பாராளுமன்றத்தில் காண்பிக்கப்படுகிறது

குறித்த தெரிவுக்குழுவின் எதிர்பார்ப்பு என்னவென்று இன்று வரைக்கும் தெரிவித்ததில்லை. ஏப்ரல் 21 சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்றில் 07 வழக்குகள் உள்ளன. அதில் நானும் இரண்டு வழக்குகளுக்கு பிரதிவாதியாக உள்ளேன்.

எனக்கும் இன்னும் குறித்த குழுவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அழைப்பு விடுக்கப்பட்டாலும் நான் ஒருநாளும் அங்கு செல்ல மாட்டேன்” என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.