பாரிய பதாதை மூலம் கணவர் தேவை எனக் கோரி விளம்பரம் செய்த நடிகை

ஆரண்யா பூய் பதும்தோங் எனும் இப் பெண் தொலைக்காட்சி நடிகையாவார். 45 வயதாகியும் இன்னும் இவர் கன்னியாகவே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் திருமணம் செய்துகொள்ள விரும்பும் அவர், மணமகனை தேடுவதற்காக பேங்கொங் நகரில் பாரிய பதாதை மூலம் விளம்பரம் செய்துள்ளார்.

இப் பதாதையில் தாய் மொழியில், “40, கன்னி: பூய் ஆரண்யாவுக்கு கணவர் தேவை. நான் இறப்பதற்கு முன் அதை அடைய விடுங்கள்” என எழுதப்பட்டுள்ளதுடன் தொலைபேசி இலக்கமும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், நடிகை ஆரண்யா பதும்தோங்குக்கு உண்மையில் 45 வயது என தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, இந்த விளம்பரம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவலாகியதையடுத்து மேற்படி பதாதையை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட விளம்பர முகவர் நிறுவனத்துக்கு தாய்லாந்து பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக நடிகை ஆரண்யாவிடமும் விசாரணை நடத்தவுள்ளதாக தாய்லாந்து பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.