பாரிய வீழ்ச்சியில் பிரித்தானியாவின் ஸ்ரேலிங் பவுண்.

வரலாறு காணாத வகையில் பிரித்தானியாவின் ஸ்ரேலிங் பவுண் அண்மைய நாட்களில் பாரிய பெறுமதி வீழ்ச்சியினை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிராக 1.24ஆகவும் ஐரோப்பாவின் யூறோவுக்கு எதிராக 1.11ஆகவும் பிரித்தானியாவின் ஸ்ரேலிங் பவுண் வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான நாணயங்களுக்கு எதிராகவும் பிரித்தானிய பவுண் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிய சந்தைகளில் திடீரென ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியே பிரித்தானியாவின் ஸ்ரேலிங் பவுணின் பெறுமதி சரிவுக்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.