“பார்பி’ என்ற கற்பனை பொம்மையின் காதலனாக “கென்’ என்ற பொம்மை போல் உருப்பெற்ற செல்ஸா

”பார்பி” பொம்மைக்கு ஜோடியாக தயாரிக்கப்பட்ட “கென்’ பொம்மை போல் உருவத்தைப் பெற அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு, பிரபலமான பிரேசில் நாட்டைச் சேர்ந்த 20 வயது இளைஞர் சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

கடந்த 4 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பிரபலமான “பார்பி’ என்ற கற்பனை பொம்மையின் காதலனாக “கென்’ என்ற பொம்மை வடிவமைக்கப்பட்டது.

இந்த பொம்மைபோல் உருவம் பெற பிரேசில் நாட்டின் விளம்பர நடிகரான 16 வயது இளைஞரான செல்ஸா சான்டேபேன்ஸ் விரும்பினார்.

தனது விருப்பத்தின்படி, 50,000 அமெரிக்க டாலர்கள் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்துகொண்டு “கென்’ பொம்மைபோல் உருவம் பெற்றார். இதன்பிறகு உலக அளவில் புகழ் பெற்றார்.

நான்கு மாதங்களுக்கு முன்பு தொற்று நோயால் பாதிக்கப்பட்ட செல்ஸா, அதற்காக பரிசோதனை மேற்கொண்டபோது ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

செல்ஸாவின் இறப்பு குறித்து அவரது தந்தை கூறுகையில், “செல்ஸா தனது லட்சியங்களை நிறைவேற்றத் தொடங்கியபோது, புற்றுநோய் வந்து தடுத்து விட்டது’ என்றார்.