பாலர் பாட­சா­லையில்  கற்­ப­தற்கு இணை­யு­மாறு மூதாட்­டிக்கு கடிதம்

சுவீ­டனைச் சேர்ந்த 104 வய­தான மூதாட்டி ஒரு­வரை பாலர் பாட­சா­லை­யொன்றில் இணை­யு­மாறு அந்­ நாட்டு அதி­கா­ரிகள் கடிதம் அனுப்­பி­யுள்­ளனர்.

மஜா பேர்ஸ்ட்ரோம் எனும் இந்த மூதாட்டி இது குறித்து கூறு­கையில், “104 வயதில் பாலர் பாட­சா­லையில் கல்வி கற்­ப­தற்­காக இணை­வது வேடிக்­கை­யா­னது.

நான் மாத்­தி­ரமே அந்த வகுப்பில் 104 வயது மாண­வி­யாக இருப்பேன்” எனத் தெரி­வித்­துள்ளார்.

இவர் பாலர் பாட­சா­லையில் இணை­வது தொடர்­பாக இப்­பெண்ணின் 78 வயது மக­ளான பேர்­ஜிட்­டா­வுக்கு அதி­கா­ரிகள் கடிதம் அனுப்­பி­யி­ருந்­தனர். இக் ­க­டி­தத்தைப் பார்த்த பேர்­ஜிட்டா பெரும் வியப்­ப­டைந்தார்.

மஜா பேர்ஸ்ட்­ரோமை பேர்­ஜிட்­டாவின் தாயார் என அறி­யாமல் அவரின் வீட்­டி­லுள்ள ஒரு குழந்தை என அதி­கா­ரிகள் எண்­ணி­விட்­ட­மையே இக் ­க­டிதம் அனுப்­பப்­பட்­ட­மைக்கு காரணம் என பின்னர் தெரி­ய­வந்­தது.

2011, 2012, 2013 ஆம் ஆண்­டு­களில் பிறந்த சிறார்­களை பாலர் பாட­சா­லை­களில் இணைப்­ப­தற்­கான கடி­தங்­களை அதி­கா­ரிகள் அனுப்­பிக்­ கொண்­டி­ருந்­தனர்.

இதன்­போது கணி­னியில் ஏற்­பட்ட கோளாறு கார­ண­மாக ஒரு நூற்­றாண்­டுக்கு முன்னர் பிறந்த 100 வயதைக் கடந்­த­வர்­களும் குழந்­தை­க­ளாக கருதப்பட்டுள்ளதாக உள்ளூர் பாடசாலைகள் பதிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரியான ஸ்டெஜெர்ட் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.