பாலியல் குற்றச்சாட்டினை முற்றாக மறுக்கிறது இலங்கை கிரிக்கெட் சபை..

பாகிஸ்தானின் பெண் ஊடகவியலாளர் ஒருவரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படும் நபருக்கும் இலங்கை கிரிக்கெட் சபைக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என இலங்கை கிரிக்கெட் சபை குறித்த செய்திக்கு மறுப்புத் தெரிவித்து ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது..

குறித்த அறிக்கையில்; பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த நபர் இலங்கை கிரிக்கெட்டின் அதிகாரியோ அல்லது பணியாளரோ கிடையாது என தெரிவித்துள்ளதோடு, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டித் தொடர் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்றுள்ள தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஊடகவியலாளரே இவ்வாறு, பாகிஸ்தான் பெண் ஊடகவியலாளரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இந்த பாலியல் தொந்தரவு தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இலங்கை கிரிக்கெட்டிற்கு அதிகாரபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளது.

இந்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்திய போது, பாலியல் தொந்தரவு செய்தவர் இலங்கை கிரிக்கெட்டைச் சேர்ந்தவர் அல்ல என்பது தெரிய வந்துள்ளது.

முனசா ஜிலானி என்ற பெண் ஊடகவியலாளருக்கு வட்ஸ்அப் மூலம் குறித்த இலங்கையர் பாலியல் ரீதியாக தொந்தரவு தரும் தகவல்களை அனுப்பி வைத்துள்ளதோடு, ஜிலானி தனது டுவிட்டர் பதிவில், இந்த விடயங்கள் குறித்த விபரங்களை பதிவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)